வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு... பெறுவது எப்படி?
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 10ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 10ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
இந்த நிவாரண தொகையை பெற்றுக் கொள்ளும் நடைமுறை குறித்து இன்று (07) இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த நிவாரண தொகையை பெற்றுக்கொள்வதற்கு கிராம உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி இதனை தெரிவித்துள்ளார்.
கிராம உத்தியோகத்தரின் சான்றிதழ் மற்றும் அதற்கான பரிந்துரைகள் தேவைப்படும் என அவர் கூறயுள்ளார்.
சீரற்ற வானிலையால், கடந்த முதலாம் திகதி முதல் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 113 பிரதேச செயலக பிரிவுகளில் வாழும் 2,39,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். (News21)