இறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வென்றால் ரோகித் என்ன முடிவு செய்யனும்.. எது சாதகம்?

உலகக்கோப்பை இறுதிப்போட்டி என்பதால் கடும் நெருக்கடி இரு அணிகள் மீதும் இருக்கும். 

நவம்பர் 19, 2023 - 15:14
இறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வென்றால் ரோகித் என்ன முடிவு செய்யனும்.. எது சாதகம்?

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள ஐசிசி உலக கோப்பை இறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

20 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுவதால் யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு ரசிகன் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் அகமதாபாத் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் நாணய சுழற்சியில் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். உலகக்கோப்பை இறுதிப்போட்டி என்பதால் கடும் நெருக்கடி இரு அணிகள் மீதும் இருக்கும். 

இதனால்  நாணய சுழற்சியில் வென்று முதலில் பேட்டிங் செய்து மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தால், அந்த அணிக்கு வெற்றி சாதகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக அரை இறுதியில் இந்திய அணி  நாணய சுழற்சியில் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து மிகப் பெரிய இலக்கை நிர்ணயித்தது.

இதன் மூலம் இந்தியாவுக்கு வெற்றி எளிதானது. இதேபோன்று இறுதிப் போட்டியிலும் இந்திய அணி  நாணய சுழற்சியில் வென்று முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். ஒருவேளை  நாணய சுழற்சியை இழந்து இந்தியா இரண்டாவதாக பேட்டிங் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டாலும் மனம் தளரக்கூடாது. 

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி இரண்டாவதாக தான் பேட்டிங் செய்தது. அதை மனதில் வைத்துக் கொண்டு ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்யும்போது எளிதில் சுருட்டுவதற்கு வழி செய்ய வேண்டும்.

குறைந்த பட்சம் 250 லிருந்து 270 ரன்கள் வரை ஆஸ்திரேலியாவில் சுருட்ட வேண்டும். அதன் பிறகு இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட வேண்டும். அகமதாபாத் போன்ற இடங்களில் தற்போது பனிக்காலம் என்பதால் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது சாதகமான சூழல்தான் நிலவும். 

இதனால் மனதத்துவ அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்வது நல்லது. இரண்டாவதாக பேட்டிங் செய்தாலும் பிரச்சனை இல்லை.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!