வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை - தடை நீடிப்பு
எதிர்வரும் மார்ச் மாதம் 24, 28, 29 ஆகிய திகதிகளில் மனு மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது

அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு 60 வயது பூர்த்தியான அரச உத்தியோகத்தர்களுக்கு ஓய்வு வழங்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கான தடை உத்தரவை எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
176 மருத்துவ நிபுணர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவதற்கு எதிராக தாக்கல் செய்த ரிட் மனு நேற்று (31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 24, 28, 29 ஆகிய திகதிகளில் மனு மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது