ரஷ்யப் படைகளின் வான்வழித் தாக்குதலில் 3 பேர் உயிரிழப்பு

உக்ரைனில் ரஷ்ய படைகள் அடுத்தடுத்து நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

ரஷ்யப் படைகளின் வான்வழித் தாக்குதலில் 3 பேர் உயிரிழப்பு

உக்ரைனில் ரஷ்ய படைகள் அடுத்தடுத்து நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

கீவ் புறநகர் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில், 17 வயது சிறுமி உட்பட 3 பேர் பலியான நிலையில், 11 பேர் காயமடைந்துள்ளதாக கீவ் நகர மேயர்  தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரஷ்ய தாக்குதலில் சேதமடைந்த உள்கட்டமைப்புகளை உக்ரைன் மீண்டும் புதுப்பித்து கட்டியெழுப்பும் என்று கூறிய அதிபர் ஜெலன்ஸ்கி, இவை அனைத்தையும் கடந்து செல்வோம் என்று சூளுரைத்துள்ளார். 

உக்ரைனின் மின்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதால் பல  நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.