மொட்டு கட்சியுடன் ஐ.தே.க கூட்டணி அமைக்கின்றது

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு ஆளும் கூட்டணியின் இரு பிரதான பங்காளிகளும் தீர்மானித்துள்ளன.

ஜனவரி 11, 2023 - 02:22
மொட்டு கட்சியுடன் ஐ.தே.க கூட்டணி அமைக்கின்றது

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு ஆளும் கூட்டணியின் இரு பிரதான பங்காளிகளும் தீர்மானித்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுமே இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளன.

இரு தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் இன்று(10) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சில சபைகளுக்கு யானை சின்னத்திலும், சில சபைகளுக்கு மொட்டு சின்னத்திலும் ஏனைய பகுதிகளில் பொது சின்னத்தின் கீழும் போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐந்து மாவட்டங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இன்றைய தினம் நடத்தப்பட்டதாகவும், ஏனைய மாவட்டங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் காலத்தில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு கட்சிகளின் கூட்டணிக்கான பொது சின்னம் என்னவென்பது தொடர்பிலான பொது இணக்கப்பாடு இதுவரை எட்டப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!