நாட்டின் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் கடும் மழை
ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 01 ஆம் திகதிகளில் நாட்டின் சில இடங்களில் சுமார் 150 மில்லி மீற்றர் வரையான கடும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 01 ஆம் திகதிகளில் நாட்டின் சில இடங்களில் சுமார் 150 மில்லி மீற்றர் வரையான கடும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, தற்காலிக பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காற்றும் மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று மாலை 4.30 மணி முதல் நாளை மாலை 4.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.