நாடாளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதியை வெளியேறக்கோரி போராட்டம்
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.
பிரதமரின் உரை உள்ளிட்ட சபை அமர்வுகளை அவதானிப்பதற்காக ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.
இந்நிலையில் அவருக்கு எதிராக கோஷமிட்டு எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சபை நடவடிக்கை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.