தனுஷ்க குணாதிலக மீதான சில தடைகள் நீக்கம்

மீண்டும் வட்ஸ்அப்பை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்லவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 23, 2023 - 15:15
தனுஷ்க குணாதிலக மீதான சில தடைகள் நீக்கம்

அவுஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை தளர்த்த சிட்னி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மீண்டும் வட்ஸ்அப்பை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்லவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

31 வயதான குணதிலக்க தனது பிணை நிபந்தனைகளை மாற்றுமாறு கோரி இன்று (23) மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார்.

அவர் மீது நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் அந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!