சில நாட்களின் பின்னர் இன்று கொழும்பில் எரிவாயு விநியோகம்
நேற்றும் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், 35,000 மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களின் பின்னர் இன்று கொழும்பு மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு எரிவாயு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்றும் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், 35,000 மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, லிட்ரோ நிறுவன அதிகாரிகளை இன்று அழைக்குமாறு கோப் குழுவின் தலைவருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட கப்பலில் இருந்து எரிவாயு விநியோகிப்பதற்கான லொறிகள் தாமதமாக வழங்கப்படுவது தொடர்பில் லிட்ரோ நிறுவன அதிகாரிகளிடம் வினவவே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது .