கூந்தலை பின்னுவதால் கிடைக்கும் நன்மைகள் இத்தனையா?

சீப்பு பயன்படுத்துவது என்பது சுய பாதுகாப்பு மட்டுமல்லாமல் பல அறிவியல் நன்மைகளையும் கொண்டுள்ளது. காலை, இரவு என இரண்டு முறை தலைமுடியை சீவ வேண்டும். 

Feb 1, 2024 - 20:13
கூந்தலை பின்னுவதால் கிடைக்கும் நன்மைகள் இத்தனையா?

ஆரோக்கியமான முடியை பெற வேண்டும் என்றால் தினமும் ஒரு முறை தலைமுடியை சீவுவது நல்லது. அதிகமாக முடி உதிர்வதால் ஒரு சிலர் சீப்பு பயன்படுத்துவதை தவிர்ப்பதால் வரண்ட முடி ஆகிறது. 

சீப்பு பயன்படுத்துவது என்பது சுய பாதுகாப்பு மட்டுமல்லாமல் பல அறிவியல் நன்மைகளையும் கொண்டுள்ளது. காலை, இரவு என இரண்டு முறை தலைமுடியை சீவ வேண்டும். 

நீண்ட முடி கொண்டவர்கள் முடி உடைவதை தடுக்க ஒரு நாளைக்கு மூன்று முறை தலை சீவ வேண்டும். கூந்தலை பின்னி ஜடை போடுவதால் முடிகளில் ஏற்படும் சிக்கு தவிர்க்கப்படும்.

பெண்கள் ''வெள்ளி'' நகைகளை அணிவதால் இவ்வளவு நன்மையா?

மேலும் கூந்தல் பின்னுவதால் எண்ணெய் மற்றும் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும். தலைமுடியை விரித்த நிலையில் வைத்திருந்தால் காற்று, மாசு, சூரிய ஒளி போன்றவை அதிக பாதிப்பை ஏற்படுத்தும். 

கூந்தலை அலைபாய விடாமல் ஜடை போடுவதால் தலைமுடியின் முனையில் ஏற்படும் வெடிப்புகள் தடுக்கலாம். பின்னுவதால் வறட்சி அடையாமல் ஆரோக்கியமாக இருக்கும். 

தினமும் தலை சீவுவதால் பழைய முடி, இறந்த செல்கள், தூசி, தேவையற்ற அழுக்கு போன்றவை வெளியேறும். தினமும் தலைமுடியை சீவுவதால் பளபளப்பாகவும், அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க உதவுகிறது.


நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...