அமைச்சுப்பதவிக்காக ஆளும்தரப்பில் கருத்து மோதல்
புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய 12 அமைச்சர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ள நிலையில் இதுதொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
12 அமைச்சுகளில் பெரும்பாலான அமைச்சுக்களை பொதுஜன பெரமுன கோரியுள்ளதாலேயே இந்த இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
பிரிட்டன் சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் இது தொடர்பில் இறுதி முடிவை எடுப்பார் என்று அறிய முடிகிறது.