இன்று அல்லது நாளை தேர்தல் வர்த்தமானி 

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் தேவையான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

ஜனவரி 30, 2023 - 15:42
இன்று அல்லது நாளை தேர்தல் வர்த்தமானி 

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேசிய தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் உரிய வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட வேண்டிய அவசியமில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(30) தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் தேவையான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

இது தொடர்பான வர்த்தமானி இன்று(30) அல்லது நாளை(31) அச்சிடுவதற்கு அனுப்பி வைக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல் அச்சிடுவதற்கு இதுவரை அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று(29) தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!