"அமெரிக்கா வரும் அகதிகளுக்கு நியூயார்க் நகரில் இடமில்லை"

மெக்சிகோ வழியாக அமெரிக்கா வரும் அகதிகளுக்கு நியூயார்க் நகரில் இடமில்லை என அந்நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 17, 2023 - 12:03
ஜனவரி 17, 2023 - 12:03
"அமெரிக்கா வரும் அகதிகளுக்கு நியூயார்க் நகரில் இடமில்லை"

மெக்சிகோ வழியாக அமெரிக்கா வரும் அகதிகளுக்கு நியூயார்க் நகரில் இடமில்லை என அந்நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ எல்லையை ஒட்டி அமைந்துள்ள எல் பாசோ நகருக்கு முன்னறிவிப்பின்றி வந்த எரிக் ஆடம்ஸ், அங்கிருந்த அகதிகளிடம் உரையாற்றினார்.

நியூயார்க் நகருக்கு அனுப்பிவைக்கப்பட்டும் அகதிகளுக்கு அடைக்கலம் தந்தால், ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாநகராட்சியின் செலவீனங்கள் இரட்டிப்பாகும் என தெரிவித்தார்.

அகதிகள் வருகைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் டிரம்பின் குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள மாநிலங்களுக்கு வரும் அகதிகள், ஜோ பைடனின் ஜனநாயக கட்சி கட்டுப்பாட்டிலுள்ள மாநிலங்களுக்கு பேருந்துகளில் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!