மீண்டும் உயரும் மரக்கறிகளின் விலை
பேலியகொடை - மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 600 ரூபாயாகவும் ஒரு கிலோகிராம் கரட் 400 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

சிறிது குறைந்திருந்த மரக்கறிகளின் விலை மீண்டு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதன்படி, பேலியகொடை - மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 600 ரூபாயாகவும் ஒரு கிலோகிராம் கரட் 400 ரூபாயாகவும் உயர்ந்துள்ள அதேவேளை, ஒரு கிலோகிராம் வெண்டைக்காய் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் திடீரென ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் மரக்கறிகளின் விலையேற்றத்திற்கு பிரதான காரணம் என மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.