வவுனியா இளம் தம்பதி படுகொலை: பிரதான சந்தேக நபர் கைது
நீதிமன்ற அனுமதியுடன் அவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணையின் பின்னர் கூமாங்குளத்தை சேர்ந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டி இருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையை ஐந்து சந்தேக நபர்கள் முன்னதாக கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற அனுமதியுடன் அவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணையின் பின்னர் கூமாங்குளத்தை சேர்ந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மரணமடைந்த சுகந்தனின் நண்பராக இருந்து, பெண் விவகாரத்தால் பின்னர் பிரிந்தவருமான நபரே இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.