அமெரிக்காவைச் சுட்டெரிக்கும் வெயில்; கடுமையான வெப்பத்தால் மக்கள் அவதி
முன்னதாகப் பதிவான அதிகபட்ச வெப்பநிலையைவிட அது 6 டிகிரி அதிகம் என்று அமெரிக்க தேசிய வானிலைச் சேவை தெரிவிக்கின்றது.

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிப்பதுடன், பெருநகரங்களில் வாழும் மில்லியன்கணக்கான மக்கள் கடுமையான வெப்பத்தால் அவதிப்படுகின்றனர்.
சில பகுதிகளில் வெப்பநிலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டி உள்ளதுடன், வாஷிங்டனிலும் போஸ்டனிலும் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாகப் பதிவான அதிகபட்ச வெப்பநிலையைவிட அது 6 டிகிரி அதிகம் என்று அமெரிக்க தேசிய வானிலைச் சேவை தெரிவிக்கின்றது.
அத்துடன், நியூயார்க்கில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை எட்டும் எனவும், நாட்டின் கிழக்குப் பகுதிகளும் வரலாறு காணாத கடுஞ்சூட்டை எதிர்கொள்ளக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.