ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரை முன்வைக்காததால், சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முழுமையாக ஆதரவளிக்க வேண்டுமென செயற்குழுவில் இணக்கம் எட்டப்பட்டதாக நாடாளுமன்றத்தின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
சுயேச்சையாகப் போட்டியிட்டு நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்திற்கு அனைவரினதும் சம்மதம் கிடைத்துள்ளதாக வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.