“டொனல்ட் டிரம்ப்புக்கு ஜனவரி 10ஆம் திகதி தண்டனை விதிக்கப்படும்“
78 வயதுடைய டிரம்ப் பதவியேற்பதற்கு 10 நாள் முன்பாக அவருக்குத் தண்டனை விதிக்கப்படும் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவாகி உள்ள டொனல்ட் டிரம்ப்புக்கு நியூயார்க் நீதிமன்றம் இம்மாதம் 10ஆம் திகதி தண்டனை விதிக்கவிருக்கிறது.
78 வயதுடைய டிரம்ப் பதவியேற்பதற்கு 10 நாள் முன்பாக அவருக்குத் தண்டனை விதிக்கப்படும் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
டிரம்ப் நேரடியாகவோ, காணொளி மூலமாகவோ நீதிமன்றத்தில் தோன்றலாம் என்று நீதிபதி கூறி உள்ளார். அமெரிக்க வரலாற்றில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததில்லை.
நடப்பு ஜனாதிபதியோ, முன்னாள் ஜனாதிபதியோ குற்றவியல் குற்றச்சாட்டைச் சந்தித்ததில்லை.