வாகன உரிமை மாற்றங்களுக்கு TIN இலக்கம் கட்டாயம் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

இதுவரை புதிய வாகனங்களைப் பதிவு செய்யும் போது மட்டுமே TIN இலக்கம் அவசியமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு முதல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமை மாற்றங்களுக்கும் அந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 12, 2026 - 10:44
வாகன உரிமை மாற்றங்களுக்கு TIN இலக்கம் கட்டாயம் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

வாகனங்களின் உரிமையை மாற்றும் போது வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான சட்ட நடைமுறைகள், கடந்த 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதுவரை புதிய வாகனங்களைப் பதிவு செய்யும் போது மட்டுமே TIN இலக்கம் அவசியமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு முதல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமை மாற்றங்களுக்கும் அந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்கள், உழவு இயந்திரங்கள், டிரெக்டர்கள் மற்றும் ஓட்டோக்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் இந்த விதி பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனப் பதிவு அல்லது உரிமை மாற்றத்தின் போது, புதிய உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை இலக்கமும் TIN இலக்கமும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவு அமைப்பில் பதிவேற்றப்பட வேண்டும்.

இச்சட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், பல காரணங்களால் அது பலமுறை ஒத்திவைக்கப்பட்டதாகவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!