இங்கிலாந்தில் 140 மில்லியன் வருட டைனோசரின் கால் தடம் கண்டுபிடிப்பு

இது 140 மில்லியன் வருடங்கள் பழைமை உடையது என தெரிய வந்திருக்கிறது.

நவம்பர் 16, 2023 - 15:26
இங்கிலாந்தில் 140 மில்லியன் வருட டைனோசரின் கால் தடம் கண்டுபிடிப்பு

இங்கிலாந்தின் டார்செட்  கவுன்டியில் உள்ள பூலே ஹார்பர் பகுதியில் உள்ள பிரவுன்சீ தீவில் காணப்படும் இயற்கை வனப் பகுதியில் ஒரு டைனோசரின் கால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது 140 மில்லியன் வருடங்கள் பழைமை உடையது என தெரிய வந்திருக்கிறது. இதனை இகுனாடோன்ஷியன் (igunodontian) எனும் வகையை சேர்ந்த டைனோசரின் கால் அடையாளம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த கால் அடையாளத்தில் 3 விரல்கள் காணப்படுகின்றன. அந்த தீவிலுள்ள பிரவுன்சீ கேஸில் (Brownsea Castle) பகுதியில் ஒரு வனத்துறை அதிகாரி சென்று கொண்டிருக்கும் போது கண்டுபிடித்திருக்கிறார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!