மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவுதி அரேபிய மாடல் பங்கேற்பு
73வது பிரபஞ்ச அழகி போட்டி மெக்ஸிகோவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகி போட்டியில் முதன்முறையாக சவுதி அரேபியா நாட்டினைச் சேர்ந்த 27 வயதான ரூமி அல்கஹதானி என்ற மாடல் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
72வது பிரபஞ்ச அழகிப்போட்டி, மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோரில் கடந்தாண்டு நடைபெற்றது. இதில் நிகராகுவாவை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.
இதையடுத்து 73வது பிரபஞ்ச அழகி போட்டி மெக்ஸிகோவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் முதன்முறையாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த மாடல் அழகியான ரூமி அல்கஹதானி பங்கேற்கிறார். இதனை தனது இன்ஸ்டாகிரமில் செய்தியாக வெளியிட்டுள்ளார்.