இராஜினாமா கடிதத்தை கையளித்தார் லிட்ரோ தலைவர்
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
ஏப்ரல் 14, 2022 என திகதியிடப்பட்ட குறித்த கடிதத்தில், முறைகேடுகள் மற்றும் ஊழலால் பாதிக்கப்பட்ட, நிதி தணிக்கைகள் அற்ற அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்தின் தலைவர் பதவியையே தாம் 2021 ஜூலை 26 ஆம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல உண்மைகள், எரிவாயு நெருக்கடி, தற்போதைய நிலைமை மற்றும் தனது தனிப்பட்ட கொள்கைகளை மேற்கோள் காட்டி, 2022 ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் பதவி விலக தீர்மானித்ததாக தெஷார ஜயசிங்க கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எரிவாயு மாஃபியாவை வௌிக்கொணர்ந்ததன் பின்னர், நிர்வாகம் மற்றும் சமூக ரீதியில் லிட்ரோ நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு இடைக்கிடையே இடையூறுகள் வந்ததாகவும், எரிவாயு தொடர்பில் இடம்பெற்ற அனைத்து நெருக்கடிகளும் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.