ஸ்வீடனில் குரங்கம்மைத் தொற்று: ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதல் சம்பவம்
ஸ்வீடன் நாட்டில் குரங்கம்மை நோய் (mpox)தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

ஸ்வீடன் நாட்டில் குரங்கம்மை நோய் (mpox)தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
மத்திய ஆப்பிரிக்காவின் கொங்கோவில் (Congo) காணப்படும் அதே ஆபத்தான Clade 1b வகையை சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஸ்வீடனின் பொதுச் சுகாதாரத் துறை இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த வகை mpox ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு வெளியே காணப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகின்றது.
ஸ்வீடன் தலைநகர் Stockholm-இல் சிகிச்சைக்கு வந்த ஒருவருக்கு இந்த வகை குரங்கம்மை இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
அவர் ஆப்பிரிக்கக் கண்டத்துக்குச் சென்றபோது அவருக்கு அந்த நோய் தொற்றியதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.