அவுஸ்திரேலியாவில் குடியேறவுள்ள சுசந்திகா ஜெயசிங்க
49 வயதான சுசந்திகா ஜயசிங்க 2000 சிட்னி ஒலிம்பிக்கில் 200 மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றவர் ஆவார்.

இலங்கையின் முன்னாள் நட்சத்திர தடகள வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க, தனது இரண்டு குழந்தைகளுடன் அவுஸ்திரேலியாவின் மெல்போர் நகரில் குடியேறத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு இலங்கையை விட்டு வெளியேறிய அவர், நாடு திரும்புவது குறித்து நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டு அவுஸ்திரேலியாவிற்கு அவர் இடம்பெயர்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது, 49 வயதான சுசந்திகா ஜயசிங்க 2000 சிட்னி ஒலிம்பிக்கில் 200 மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றவர் ஆவார்.
தடகள வீராங்கனையும், ஆசியப் பதக்கம் வென்றவருமான தமயந்தி தர்ஷாவும் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றார்.