என்ன சார் நடக்குது இங்க... 50 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது இலங்கை!
இதனால் பந்து வீச முடியாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை மேகங்கள் காரணமாக குளிர்ந்த நிலை நிலவுவதால் பந்து பயங்கரமாக ஸ்விங் ஆனது.

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
எனினும் டாஸ் வீசிய பிறகு மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஒரு மணி நேரம் கழித்து முதல் பந்து வீசப்பட்டது. மழை பெய்திருப்பதால் ஆடுகளம் ஈரப்பதமாக இருக்கும்.
இதனால் பந்து வீச முடியாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை மேகங்கள் காரணமாக குளிர்ந்த நிலை நிலவுவதால் பந்து பயங்கரமாக ஸ்விங் ஆனது.
இதனால் முதல் ஓவரிலே ஆட்டத்தின் மூன்றாவது பந்தில் பும்ரா பந்துவீச்சில் குசல் பெரேரா ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து போட்டியின் நான்காவது ஓவர் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இந்தியாவுக்கு அமைந்தது.
உலகின் முன்னாள் முதல் நிலை பந்துவீச்சாளராக இருந்த முகமது சிராஜ் இலங்கையின் பேட்டிங் வரிசையை நிலை குலைய வைத்தார்.
முகமது சிராஜின் பந்தை தொடக்கூட முடியாமல் இலங்கை வீரர்கள் தடுமாறினர். முதலில் நிஷாங்கா அடித்த பந்தை பாயிண்ட்டில் நின்ற ஜடேஜா அபாரமாக கேட்ச் பிடித்தார்.
இதன் அடுத்து அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் இளம் வீரர் சமர விக்ரமா டக் அவுட் ஆக அடுத்த பந்திலே அசலங்கா இசான் கிசன்னிடம் கேட்ச் ஆனார்.
இதனை அடுத்து முகமது சிராஜுக்கு ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது. எனினும் அதனை தவறவிட்டார்.
இதனை அடுத்து அந்த ஓவரின் கடைசி பந்தில் இலங்கை வீரர் தனஞ்செய டி செல்வாவை சிராஜ் ஆட்டமிழக்க வைத்தார். இதன் மூலம் இலங்கை அணி 12 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
குறிப்பாக முகமது சிராஜ் ஒரே ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கைக்கு சமாதி கட்டினார்.
இந்த நிலையில் 50 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது இலங்கை.