தேசிய கீத சர்ச்சை - மன்னிப்பு கோரிய பாடகி உமாரா சிங்கவன்ச

தேசிய கீதத்தின் பொருள் மற்றும் இசையினை மாற்றுவது அல்லது திரிவுபடுத்துவது அரசியலமைப்பின் படி குற்றமாகும்.

ஆகஸ்ட் 3, 2023 - 13:53
தேசிய கீத சர்ச்சை - மன்னிப்பு கோரிய பாடகி உமாரா சிங்கவன்ச

உமாரா சிங்கவங்ச

2023 லங்கா பிரீமியர் லீக் ஆரம்ப விழாவில் இலங்கை தேசிய கீதத்தை திரிபுபடுத்தி பாடியதற்காக பாடகி உமாரா சிங்கவங்ச மன்னிப்பு கோரியுள்ளார்.

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான 2023 லங்கா பிரீமியர் லீக் போட்டியின் நிகழ்வில் உமார சிங்கவங்ச தேசிய கீதத்தை பாடினார்.

இதன்போது, அவர் தேசிய கீதத்தை பாடிய விதம் சர்சையை ஏற்படுத்தியது.

தேசிய கீதத்தின் பொருள் மற்றும் இசையினை மாற்றுவது அல்லது திரிவுபடுத்துவது அரசியலமைப்பின் படி குற்றமாகும்.

எனவே, இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்ததுடன், அவரால் நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட விதம் மற்றும் அதற்காக அவர் பயிற்சி பெற்றமை குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், சர்ச்சைக்குள்ளான பாடகி உமார வீரவங்ச குறித்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட அனைவரிடத்திலும் மன்னிப்பு கோரியுள்ளார்.

தாம் ஒரு போதும் நாட்டின் கீர்த்திக்கும், தேசிய கீதத்தின் பெருமைக்கும் பாதிப்பினை ஏற்படுத்த விரும்பியதில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், நாட்டின் பெருமையை பாதுகாப்பதற்கும், தேசிய கொடியை சுமப்பதற்கும் எப்போதும் பெருமைக்கொள்வதாக பாடகி உமாரா வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் பாடகி உமாரா சிங்கவன்ச வாக்குமூலம் பெறுவதற்காக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!