கல்விசாரா ஊழியர்கள் நாளையும் நாளை மறுநாளும் தொழிற்சங்க நடவடிக்கை
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் 50 நாட்களுக்கும் மேலாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கல்வி சாரா ஊழியர்கள் நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) சுகயீன விடுமுறையை அறிவிக்க தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது பிரச்சினைகளை குறைந்தபட்ச மட்டத்தில் தீர்த்து வைப்பதற்கு தேவையான எழுத்து மூலமான உடன்படிக்கை உயர்கல்வி இராஜாங்க அமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் 50 நாட்களுக்கும் மேலாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து நல்ல பதில் கிடைக்குமாயின் நாளை அல்லது நாளை மறுதினம் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும் என அதன் இணைத் தலைவர் மங்கள தம்பரேரா தெரிவித்தார்.