பிரதமர் மோடி, நடிகர் மாதவனுடன் பிரான்ஸ் ஜனாதிபதி 'செல்பி' 

அன்றிரவு பாரீசில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் பிரான்ஸ் அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.

ஜுலை 17, 2023 - 11:26
பிரதமர் மோடி, நடிகர் மாதவனுடன் பிரான்ஸ் ஜனாதிபதி 'செல்பி' 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 13, 14-ந் திகதிகளில் பிரான்ஸ் நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். 14-ந் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற அந்த நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக மோடி பங்கேற்றார்.

அதை தொடர்ந்து, அன்றிரவு பாரீசில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் பிரான்ஸ் அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.

இந்த விருந்தில் பிரான்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த நடிகர் மாதவன் இந்த விருந்தில் பங்கேற்றார்.

விருந்தின் முடிவில் பிரதமர் மோடி, நடிகர் மாதவன் மற்றும் பிரான்சின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் மேத்யூ பிளாமினி ஆகியோருடன் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் 'செல்பி' எடுத்தார். 

அந்த 'செல்பி' சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!