விவசாய கிணற்றில் விழுந்த யானைகள் மீட்பு
முல்லைத்தீவில் விவசாய கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகளை பாதுகாப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், நேற்று (25) மீட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவில் விவசாய கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகளை பாதுகாப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், நேற்று (25) மீட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு, முள்ளியவளை தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள களிக்காடு விவசாய கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் தாய் யானை ஒன்றும் இரண்டு குட்டிகளும் வீழ்ந்துள்ளன. இந்த யானைகள், நேற்று முன்தினம் இரவு வீழ்ந்திருக்கலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
நேற்று முன்தினம் அருகில் உள்ள வயல் நிலங்களை யானைக்கூட்டம் ஒன்று நாசம் செய்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
அதற்காக கூட்டமாக வந்த காட்டு யானைகள், விவசாய கிணற்றில் வீழ்ந்திருக்கலாம் என்றும் யானையினால் நாள்தோறும் அழிவை சந்தித்து வருவதாகவும் களிக்காட்டு விவசாயிகள் தெரிவித்தனர்.
யானைகள் கிணற்றில் வீழ்ந்த சம்பவம் தொடர்பில் விவசாயிகள் கிராம அலுவலகருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வளங்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர், யானைகளை மீட்டு, காட்டில் விட்டுள்ளார்கள்.