கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இன்று (மே 21) செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (மே 21) செய்யப்பட்டுள்ளார்.
ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், அவர்களைப் பராமரிக்கவும் அமைச்சின் நிதியில் இருந்து சுமார் 8 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், ரமித் ரம்புக்வெல்ல, சந்தேக நபராக நீதிமன்றத்தால் நேற்று (மே 20) பெயரிடப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில், வாக்குமூலம் அளிக்க, புதன்கிழமை (21) காலை அவர் முன்னிலையாகி இருந்தார்.
அங்கு அவரிடம் நான்கு மணிநேர விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.