பணிப்புறக்கணிப்பை கைவிட்ட ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்கள்
ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடன் இன்று (05) காலை மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, அவர் இதனை கூறியுள்ளனர்.
முன்னதா, ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் இன்று தெரிவித்திருந்தார்.
இன்று (05) கடமையில் ஈடுபடத் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து உப கட்டுப்பாட்டாளர்களும் நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறும் ரயில்வே பொது முகாமையாளர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் பிரகாரம் ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்கள் தமது வேலைநிறுத்தத்தை கைவிட்டுள்ளனர்.
மாளிகாவத்தை ரயில் வீதியின் நுழைவாயிலில் வைத்து ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர், உப கட்டுப்பாட்டாளர் ஒருவரை தாக்கியதை அடுத்து, ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்கள் நேற்று (04) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.