வட மாகாண உள்ளூர் சேவைகளுக்கு 24 பஸ்கள் வழங்கிவைப்பு
வடக்கு இலங்கை போக்குவரத்து சாலைகளுக்கான இந்த பஸ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் - கோட்டை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (13) நடைபெற்றது.

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 1 கோடி ரூபாய் பெறுமதியான 24 பஸ்கள், வட மாகாணத்தில் உள்ளூர் வீதிகளில் போக்குவரத்துப் பயன்படுத்துவதற்காக, போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவால் வழங்கப்பட்டன.
வடக்கு இலங்கை போக்குவரத்து சாலைகளுக்கான இந்த பஸ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் - கோட்டை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (13) நடைபெற்றது.
யாழிற்கு விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து மற்றும் ஊடக அமைச்சர், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, இந்தியத் துணை தூதுவர் ராகேஸ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(தங்கராசா சுமித்தி)