நடுவானில் திடீரென உடைந்து விழுந்த விமான கதவு

அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த வேளை, அதன் அவசரகால கதவு திடீரென விமானத்தில் இருந்து தனியாக பிரிந்து கீழே விழுந்துள்ளது.

ஏப்ரல் 28, 2024 - 13:09
நடுவானில் திடீரென உடைந்து விழுந்த விமான கதவு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் அவசர கதவுகள் தீடிரென கீழே விழுந்த சம்பவத்தினால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.

டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் 520 என்ற எண் கொண்ட போயிங் 767 ரக குறித்த விமானமானது லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி புறப்பட்டது.

இதன்போது, அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த வேளை, அதன் அவசரகால கதவு திடீரென விமானத்தில் இருந்து தனியாக பிரிந்து கீழே விழுந்துள்ளது.

இது தொடர்பில் விமானிக்கு தகவல் சென்ற நிலையில் உடனடியாக அந்த விமானம் மீண்டும் நியூயார்க்குக்கு திரும்பி அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம், விமானம் புறப்பட்டு சென்று 33 நிமிடங்கள் கழிந்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விமானத்திலிருந்து அவசரகால கதவு கீழே விழுந்த சம்பவம் பற்றி அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்த உள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!