பாகுபாடு மற்றும் அவமதிப்பு: பிரித்தானியாவை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் மருத்துவர்கள்
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஏற்பட்டுவரும் வெறுப்பு மற்றும் மோசமான அணுகுமுறையின் காரணமாக, பலரும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக அந்நாட்டு அரசு மருத்துவ அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

பொது மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட தகவலின்படி, 2024ஆம் ஆண்டில் மட்டுமே புலம்பெயர் பின்னணி கொண்ட 4,880 மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளனர். இது, முந்தைய ஆண்டைவிட 26% அதிகமான வெளியேற்றமாகும்.
NHS தலைவர்களும், மூத்த மருத்துவர்களும் தெரிவித்ததாவது, இவர்கள் மீது நிகழும் அநாகரிக விமர்சனங்கள் மற்றும் பாகுபாடான நடத்தையே மருத்துவர்கள் நாட்டை விட்டு செல்லும் முக்கிய காரணமாகக் காணப்படுகின்றது.
NHS Providers அமைப்பின் தலைமை நிர்வாகி டேனியல் எல்கெல்ஸ் கூறியதாவது, வெளிநாட்டு மருத்துவர்கள் இல்லாமல் NHS இயங்கவே முடியாது; ஆனால், பாகுபாடு மற்றும் அவமதிப்பு தொடரும் நிலையில், பலர் பிரித்தானியாவில் தங்குவதற்குப் பதிலாக வேறு நாடுகளில் வேலை தேடி செல்வதைத் தேர்வு செய்கிறார்கள்.
உண்மையில், புலம்பெயர்ந்த மருத்துவர்கள் எங்கு சென்றாலும் வேலை வாய்ப்பு பெறலாம். இருப்பினும், அவர்கள் பிரிட்டனை விட்டு வெளியேறுவது அந்நாட்டு மருத்துவ அமைப்பிற்கு பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது.