சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு நாட்களில் வெளியீடு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 7 நாடுகளுக்கு இலவச வீசா... உடனடியாக அமுல்! எவ்வாறு பெறுவது?
இதேவேளை, அடுத்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் கடந்த நாட்களாக பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.