சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட பெண்களுக்கு தடை விதிப்பு... எங்கு தெரியுமா?
வடகொரியாவில் பெண்களுக்கு சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூச தடை விதிக்க அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் முடிவு செய்துள்ளார்.

வடகொரியாவில் பெண்களுக்கு சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூச தடை விதிக்க அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் முடிவு செய்துள்ளார்.
சிவப்பு நிற உதட்டுச்சாயம் மட்டுமின்றி, உலக அளவில் பிரபலமான ஃபேஷனையும் தடை செய்ய வடகொரிய அரசாங்கம் சட்டம் இயற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைவர் கிம் ஜாங்-உன் கவர்ச்சியின் அடையாளமாக சிவப்பு உதட்டுச்சாயத்தை தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சட்டங்களை மீறும் பெண்களை கடுமையாக தண்டிக்க வடகொரிய தலைவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.