இனி ChatGPT தளத்தில் விளம்பரங்கள்: செலவுகளை சமாளிக்க OpenAI புதிய முயற்சி

முதற்கட்டமாக அமெரிக்காவில் ChatGPT-ஐ இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தும் பயனர்களுக்கு விளம்பரங்கள் காண்பிக்கப்படும்.

ஜனவரி 18, 2026 - 17:42
இனி ChatGPT தளத்தில் விளம்பரங்கள்: செலவுகளை சமாளிக்க OpenAI புதிய முயற்சி

எதிர்வரும் வாரங்களில் OpenAI நிறுவனத்தின் பிரபல செயற்கை நுண்ணறிவுத் தளமான ChatGPT-இல் விளம்பரங்களை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. தொடர்ந்து உயரும் தொழில்நுட்பச் செலவுகளை சமாளித்து, வருவாயை அதிகரிக்கும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அமெரிக்காவில் ChatGPT-ஐ இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தும் பயனர்களுக்கு விளம்பரங்கள் காண்பிக்கப்படும். அதே நேரத்தில் Premium Pro மற்றும் Enterprise சந்தா சேவைகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு விளம்பரங்கள் காட்டப்படமாட்டாது என OpenAI நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் ChatGPT தளத்தை சுமார் ஒரு பில்லியன் பேர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அவர்களில் மிகச் சிறிய பகுதியினரே கட்டண சந்தா சேவைகளுக்கு பணம் செலுத்துவதாகவும் கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டு ChatGPT அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து OpenAI நிறுவனத்தின் மதிப்பு 500 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டி உயர்ந்துள்ளது.

எனினும், ChatGPT போன்ற சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவுச் சேவைகளை இயக்க அதிகமான கணினி வளங்களும், பெரும் செலவுகளும் தேவைப்படுகிறது. இந்தச் செலவுகளை ஈடு செய்யவும், நீண்டகாலத்தில் சேவைகளை நிலைநிறுத்தவும் OpenAI நிறுவனம் புதிய வருவாய் வாய்ப்புகளை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!