பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை: உண்மை என்ன?

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை குறித்து முன்னர் வெளியிடப்பட்டிருந்த தரவுகளை விட உண்மையான கணக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருப்பது தற்போது வெளிப்பட்டுள்ளது.

நவம்பர் 19, 2025 - 07:06

கடந்த ஆண்டில், பிரித்தானியாவை விட்டு சென்றுகொண்டிருக்கும் பிரித்தானியர்கள் எண்ணிக்கை 77,000 என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய தேசிய புள்ளியியல் அலுவலக (ONS) தகவல்கள் அது உண்மையில் 257,000 என உறுதிப்படுத்துகின்றன.

அதேபோல், பிரித்தானியாவிற்குத் திரும்பிவரும் குடிமக்கள் எண்ணிக்கை 60,000 என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்திய தரவுகள் 143,000 பேர் நாடு திரும்பியுள்ளதாக காட்டுகின்றன.

2024 டிசம்பர் நிலவரப்படி, நிகர புலம்பெயர்தல் 345,000 ஆக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட கணக்கீட்டில் இது 431,000 என குறிப்பிடப்பட்டிருந்ததை விட குறைந்துள்ளதால், அரசுக்கு இது ஒரு நேர்மறையான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!