காஸாவில் 40,000 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு - ஹமாஸ் சுகாதார அமைச்சு தகவல்
காஸாவில் 40, 000 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

காஸாவில் 40, 000 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சுமார் 2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் காஸாவில் உள்ள கட்டடங்களில் சுமார் 60 சதவீதம் போரில் சேதமுற்றதாகத் துணைக்கோளப் படங்கள் காட்டுகின்றன.
கடந்த சில மாதங்களில் தெற்கில் இருக்கும் ராஃபா (Rafah) நகரமே அதிகமாக சேதமடைந்துள்ளதை படங்கள் காட்டுகின்றன.
உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் ஹமாஸைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் பொது மக்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
மரணம் அடைந்த மக்களின் அடையாளத்தை வைத்துப் பார்க்கும்போது அவர்களில் பெரும்பாலோர் பிள்ளைகளும், பெண்களும், முதியவர்களும் என்று தெரிய வந்துள்ளது.