மழையினால் சீனாவுக்கு வந்தச் சோதனை: நூறாண்டுக்கு ஒரு முறை விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சீனாவின் தென் பகுதி மக்களுக்கு வெள்ளம் குறித்த எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தென் பகுதி மக்களுக்கு வெள்ளம் குறித்த எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.
நூறாண்டுக்கு ஒரு முறை அத்தகைய எச்சரிக்கை விடுக்கப்படுவதாகச் சீனா தெரிவித்துள்ளது.
பல நாள்களாக நீடிக்கும் கனத்த மழை, பல்லாயிரக்கணக்கானோரை வீடுகளில் இருந்து வெளியேற்றியுள்ளது.
அங்கு இரண்டாம் நிலை அவசரகால நடவடிக்கைகளைச் செயல்படுத்தியிருப்பதாகவும் நிலைமை மோசமாக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
ஆறுகளில் தண்ணீரின் அளவு வெகுவாக அதிகரித்துள்ளதுடன், சில பகுதிகளில் நான்கு மணி நேரத்தில் சுமார் 13 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சீனாவின் குவாங்டொங் மாநிலத்தின் மத்திய, வடக்குப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாகக் கடும் மழை பெய்துவருகிறது..
அதன் நகர்ப்பகுதிகளில் இருந்து சுமார் 45,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியதுடன், மண்சரிவுகளால் ரயில்சேவைகள் பாதிக்கப்பட்டன. நெடுஞ்சாலைகள் சில மூடப்பட்டன.
சில கப்பல் போக்குவரத்தும் தடைபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.