இளம் மனைவியின் இறுதி ஆசை... அஸ்தியைக் கரைக்க இந்தியா வந்தவர் உயிரிழந்த சோகம்!

அர்ஜூனும் தமது மனைவி பாரதிபேனும்  8 மற்றும் 4 வயது இரண்டு மகள்களுடன் இலண்டனில் வசித்து வந்ததனர்.

ஜுன் 15, 2025 - 10:03
இளம் மனைவியின் இறுதி ஆசை... அஸ்தியைக் கரைக்க இந்தியா வந்தவர் உயிரிழந்த சோகம்!

ஒரு வாரத்துக்கு முன்பு மரணம் அடைந்த தமது இளம் மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற இந்தியாவுக்குச் சென்ற கணவரான 38 வயது அர்ஜூன் படோலியா,  ஏர் இந்தியா விபத்தில்  உயிரிழந்தார்.

தமது அஸ்தியை இந்தியாவில் கரைக்க வேண்டும் என்று அவரது மனைவி கடைசியாக கேட்டுக் கொண்டார்.

அர்ஜூனும் தமது மனைவி பாரதிபேனும்  8 மற்றும் 4 வயது இரண்டு மகள்களுடன் இலண்டனில் வசித்து வந்ததனர்.

மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது அஸ்தியை பூர்வீக கிராமத்துக்கு எடுத்துச் சென்றார் அர்ஜூன்.

அஸ்தியைக் கரைத்துக் காரியங்களை நிறைவேற்றிய பிறகு இலண்டன் திரும்புவதற்காக அர்ஜூன் ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய நிலையில், அந்த விமானம் விபத்துக்குள்ளானது.

இலண்டனில் அவரது மகள்கள் இருவரும் தந்தையின் வருகைக்காக காத்திருந்தனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!