தெருவில் நிர்வாணமாக நடந்து சென்ற நபர்... மக்கள் அதிர்ச்சி..!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு ஒரு நபர் மக்கள் நடமாட்டுள்ள தெருவில் நிர்வாணமாக நடந்து சென்று பரபரப்பை கிளப்பியுள்ளார். 

Mar 14, 2023 - 17:20
தெருவில் நிர்வாணமாக நடந்து சென்ற நபர்... மக்கள் அதிர்ச்சி..!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு ஒரு நபர் மக்கள் நடமாட்டுள்ள தெருவில் நிர்வாணமாக நடந்து சென்று பரபரப்பை கிளப்பியுள்ளார். 

அம்மாகாணத்தின் வெஸ்ட் பாம் பீச் பகுதியைச் சேர்ந்த 44 வயது நபரான ஜேசன் ஸ்மித். இவர் கடந்த மார்ச் 8அன்று வொர்த் அவென்யூ என்ற பகுதியில், ஆடைகளில் ஏதுமின்றி நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார்.

நிர்வாணமாக நடந்து சென்ற நபரை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர். 

உடனே, அங்கு விரைந்த காவல்துறை அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளது. முதலில் அந்த நபர் தனது பெயர், பிறந்த தேதி விவரங்களை தெரிவிக்கவில்லை.

தனக்கு ஏதும் அடையாளங்கள் ஏதும் இல்லை நான் வேற்று பூமியை சேர்ந்தவன் என்று கூறியுள்ளார். பதிலைக் கேட்டு திகைத்து போன போலீசார் பின்னர் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள,  அவரின் பெயரும் வசிப்பிட விவரமும் தெரியவந்துள்ளது.

இவரிடம் உரிய அடையாள அட்டைகள் ஏதும் இல்லை. தனது உடைகள் எங்கே போனது எனத் தெரியவில்லை என்று அவர் போலீசிடம் கூறியுள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர் 3  பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இது போன்ற வினோத சம்பவங்கள் புளோரிடாவில் நடப்பது முதல்முறை அல்ல. கடந்தாண்டு இதுபோல் தான் ஒரு நபர் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரவில் பாட்ர்டியில் கலந்துகொண்டுவிட்டு போதையில் ஒரு வீட்டின் குளியலறைக்குள் நுழைந்துள்ளார். அங்குள்ள குளியல் தொட்டிக்குள் நிர்வாணமாக தூங்கவே, அந்த வீட்டார் அதிர்ச்சி அடைந்து காவல்துறையிடம் புகார் தந்து கைது செய்துள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.