யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் விபத்து: மூவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பஸ் முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் விபத்துக்கு உள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பஸ் முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் விபத்துக்கு உள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பஸ் ஒன்றின் பின்பகுதியில் பாரவூர்தி ஒன்று மோதியதில் நேற்று இரவு 11 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த பஸ் பழுதடைந்ததன் காரணமாக ஏ9 வீதியில் 228வது கிலோமீற்றர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.
இதன் போது பயணிகள் இறங்கி பஸ்ஸின் பின்புறமாக நின்று கொண்டிருந்த போது பாரவூர்தி மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவரின் நிலை மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.