காணி வாங்க எதிர்பார்ப்போருக்கு வெளியான தகவல்... பெறுமதியில் திடீர் மாற்றம்
காணியின் பெறுமதி15 சதவீத அதிகரிப்பைக் கண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்துக்குள் 2023இன் முதல் பாதி காலப்பகுதியில் காணியின் பெறுமதி15 சதவீத அதிகரிப்பைக் கண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி குடியிருப்பு நில மதிப்புகள் 17.2 சதவீதம் உயர்ந்துள்ளதுடன், வணிக நில மதிப்பு 15.1 சதவீதம் அதிகரித்து, தொழில்துறை நில பெறுமதி 13.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதேவேளை, அரையாண்டு காலக்கெடுவைக் கருத்தில் கொள்ளும்போது, குறியீட்டு எண் 4.9 சதவீதம் உயர்ந்துள்ளது.