கேதுபகவானால் ராஜாவாகப் போற 4 ராசிகள்... உங்க ராசி இதுல இருக்கா?

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கேது பெயர்ச்சி செல்வந்தர்களை ஏழைகளாகவும், ஏழைகளை கோடீஸ்வரராகவும் மாற்றக்கூடும். இந்த கிரக மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான மாற்றங்களை வழங்கப்போகிறது.

மார்ச் 8, 2025 - 12:25
கேதுபகவானால் ராஜாவாகப் போற 4 ராசிகள்... உங்க ராசி இதுல இருக்கா?

2025ஆம் ஆண்டில் கேதுவின் பெயர்ச்சி பல முக்கியமான மாற்றங்களை கொண்டுவரப்போகிறது. கேது மே மாதத்தில் சிம்ம ராசிக்கு மாறுகிறார், இது பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தப்போகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கேது பெயர்ச்சி செல்வந்தர்களை ஏழைகளாகவும், ஏழைகளை கோடீஸ்வரராகவும் மாற்றக்கூடும். இந்த கிரக மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான மாற்றங்களை வழங்கப்போகிறது.

எந்தெந்த ராசிக்காரர்கள் கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெற போகிறார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த கிரக பெயர்ச்சி வணிகத்திலும், தொழிலிலும் மிகப்பெரிய வெற்றியைக் கொண்டுவர உள்ளது. 2025 ஆம் ஆண்டு நடக்கும் கேது பெயர்ச்சியால் அவர்களை நிதி வளர்ச்சி, வேலையில் அங்கீகாரம் மற்றும் மேலதிகாரிகளிடமிருந்து வலுவான ஆதரவை எதிர்பார்க்கலாம். அவர்களின் புதுமையான யோசனைகள் புதிய வாய்ப்புகளுக்கு வழி வகுக்கும். அவர்கள் ரிஸ்க் எடுப்பது அவர்களின் தலைவிதியை மாற்றப்போகிறது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு, கேது மூன்றாவது வீட்டில், அதாவது தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் வீட்டில் நுழைகிறார். இந்த கிரக பெயர்ச்சி அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும், இதனால் அவர்கள் தடைகள் மற்றும் போட்டியாளர்களை எளிதாக வெல்ல முடியும். இந்த பெயர்ச்சியால் பணியிடத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்கும், மேலும் கடந்த கால நோய்களில் இருந்து கூட நிவாரணம் பெறலாம். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இது மறக்க முடியாத நேரமாக இருக்கும்.

கடகம்

இந்த கிரக மாற்றம் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வெற்றிப் பயணத்தை தொடகங்கி வைக்கப்போகிறது. கேது பெயர்ச்சியின் படி, புதிய ஒப்பந்தங்கள், லாப அதிகரிப்பு மற்றும் உடன்பிறந்தவர்களின் வலுவான ஆதரவு உங்கள் நிதி நிலையை உயர்த்தும். பதவி உயர்வுகள் மற்றும் தொழிலில் முன்னேற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. தொழிலை விரிவுபடுத்தவும் மற்றும் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யவும் இது உகந்த நேரமாகும்.

கன்னி

கேது பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் பழைய கடன்கள் மற்றும் சட்ட சிக்கல்களில் இருந்து நிவாரணம் பெற்று நிதி முன்னேற்றங்களை அனுபவிப்பார்கள். அவர்கள் நீதிமன்ற விஷயங்களில் சிக்கியிருந்தால், அதிர்ஷ்டம் அவர்களின் பக்கம் சாதகமாக இருக்கும், இது நேர்மறையான பலன்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக இறக்குமதி-ஏற்றுமதி வணிக உரிமையாளர்கள் குறிப்பிடத்தக்க லாபத்தை அடைவார்கள். இப்போது பணப்புழக்கம் அதிகரிக்கும், இது நீண்டகால பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டுவரும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!