ஈரான் மீதான வான் தாக்குதல்கள் - தீவிரப்படுத்திய இஸ்ரேல்

இஸ்ரேலியக் குடிமக்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்தால், தெஹ்ரான் (Tehran) பற்றி எரியும் என்று இஸ்ரேல் எச்சரித்து உள்ளது.

ஜுன் 15, 2025 - 09:52
ஈரான் மீதான வான் தாக்குதல்கள் - தீவிரப்படுத்திய இஸ்ரேல்

இஸ்ரேலியக் குடிமக்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்தால், தெஹ்ரான் (Tehran) பற்றி எரியும் என்று இஸ்ரேல் எச்சரித்து உள்ளது.

இஸ்ரேலிய இராணுவம், ஈரானில் 150க்கும் அதிகமான இடங்களைக் குறிவைத்து தாக்கியது.

இந்த தாக்குதல்களில் மேலும் மூன்று ஈரானிய அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. 

இதுவரை 9 அறிவியலாளர்கள் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதுடன்,  பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பெறும் ஈரானின் ஆற்றலுக்கு இது பேரடி என்று இஸ்ரேல் கூறியது.

இதற்கிடையே இன்று காலை ஈரான் சுமார் 200 ஏவுகணைகளை வீசியதாக இஸ்ரேல் கூறியதுடன், குறைந்தது மூவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.

இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலுக்கு பதிலடி என்று ஈரான் கூறியதுடன், இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கு உதவினால் பிராந்தியத்தில் உள்ள அந்நாடுகளின் படைத் தளங்களும் கப்பல்களும் குறிவைக்கப்படும் என்று பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகியவற்றை ஈரான் எச்சரித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!