19 வயதில்  உயிரிழந்த இளம்பெண் பிரபலம்! மேயரின் மகளுக்கு ஏற்பட்ட சோகம்!

பிரேசிலில் 19 வயது இளம்பெண்ணொருவர், அவசர கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

டிசம்பர் 12, 2023 - 12:00
டிசம்பர் 12, 2023 - 12:01
19 வயதில்  உயிரிழந்த இளம்பெண் பிரபலம்! மேயரின் மகளுக்கு ஏற்பட்ட சோகம்!

பிரேசிலில் 19 வயது இளம்பெண்ணொருவர், அவசர கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

பிரேசிலில் உள்ள Caucaiaவின் நகர மேயராக இருப்பவர்  விக்டர் வாலிம் (45). இவரது 19 வயது மகள் மரியா சோஃபியா வாலிம் . இன்ஸ்டாகிராமில் இவர் அழகு குறிப்புகள் கூறுவது, தினசரி தனது நடவடிக்கைகளை பதிவிடுவதன் மூலம் ஒரு லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டிருந்தார். 

இவ்வாறு இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர் அண்மையில் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். குறிப்பாக அவரது கல்லீரல் செயலிழந்திருந்தது.  

இதன் காரணமாக அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அவர் சனிக்கிழமை அன்று உயிரிழந்ததாக அவரின் தந்தை அறிவித்தார். 

அவரது பதிவில், 'எனது அன்பு மகள் சோஃபியாவின் இறப்பினை அனைவருக்கும் ஆழ்ந்த வலி மற்றும் சோகத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். துரதிர்ஷ்டவசமாக அவளது உடலால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதீத துன்பத்தின் இந்த தருணத்தில் எனக்காகவும் எனது குடும்பத்தினருக்காகவும் அர்ப்பணித்த பிரார்த்தனை மற்றும் பாசத்திற்காக அனைவருக்கும் நன்றி' என சோகத்துடன் தெரிவித்தார். 

இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்த சோஃபியாவின் ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள், அவரது மரணத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.   

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!