பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளும் நாடுகடத்தப்படலாம்: உள்துறைச் செயலரின் புதிய குடியேற்றத் திட்டம்
பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளும் எதிர்காலத்தில் நாடுகடத்தலுக்கு உள்ளாக்கப்படலாம் என உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் புதிய திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார்.
பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளும் எதிர்காலத்தில் நாடுகடத்தலுக்கு உள்ளாக்கப்படலாம் என உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் புதிய திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார்.
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அகதி நிலையை இழந்த பின்னரும், பிரித்தானியாவில் குழந்தை பெற்றதை காரணமாகக் கொண்டு அங்கே தங்கிச் செல்லும் சூழலைத் தடுக்க இந்த மாற்றம் கொண்டு வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய சட்டப்படி, பிரித்தானியாவில் பிறந்த குழந்தை தானாகவே குடியுரிமை பெறுவதில்லை. வாழ்க்கையின் முதல் 10 ஆண்டுகளை அந்நாட்டில் செலவிட்டால் மட்டுமே அவ்வாறு தகுதி கிடைக்கும்.
இந்த விதிமுறையை தவறாக பயன்படுத்தி, குழந்தையை காரணம் காட்டி பிரித்தானியாவில் தங்குவதற்கான முயற்சிகளை கட்டுப்படுத்துவதற்காகவே புதிய நடவடிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம், பெற்றோரின் குடியேற்ற நிலை ரத்து செய்யப்பட்டால், அவர்கள் பிரித்தானியாவில் பெற்ற குழந்தைகளும் நாடுகடத்தப்படலாம் என்ற நிலையை உருவாக்குவதால், அரசின் தலையீடு குடும்பத் திட்ட முடிவுகளிலும் தாக்கம் செலுத்தும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.