குட்டி யானைக்கு நிகரான மிகப்பெரிய நாய்... எங்கு உள்ளது தெரியுமா?
அதன் உணவுக்கு ஒரு நாளைக்கு 11 யூரோ செலவாகும் எனவும் இது ஆண்டுக்கு 4,000 யூரோ என குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தின் மிகப்பெரிய நாய் ஒன்று தற்போது பிரபலமாகி வருகின்றது. 7 அடி 2 அங்குலம் வளர்ந்திருக்கும் இந்த நாய், ஒரு குட்டி யானைக்கு நிகரான எடையுடன் உள்ளது.
இரண்டு வயதான நாய், ஒரு நாளைக்கு 3 கிலோகிராம் இறைச்சியை உண்கிறது.
ஒரு முழு கோழி, மூன்று முழு கானாங்கெளுத்தி, இரண்டு முட்டைகள் மற்றும் பச்சை நாய் உணவு உட்பட பல சத்தான உணவுகளை உண்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், அதன் உணவுக்கு ஒரு நாளைக்கு 11 யூரோ செலவாகும் எனவும் இது ஆண்டுக்கு 4,000 யூரோ என குறிப்பிட்டுள்ளார்.