யாழில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 

அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றினை அமைக்க நேற்று செவ்வாய்க்கிழமை  (20) அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன. 

ஜுன் 21, 2023 - 14:23
யாழில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 

மனித எச்சங்கள்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றினை அமைக்க நேற்று செவ்வாய்க்கிழமை  (20) அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன. 

அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், அப்பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அது தொடர்பில் இன்று(21) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றுக்கு அறிவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் அவ்விடத்தில் மேலதிக அகழ்வு பணிகளை முன்னெடுக்க உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!